Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக யாழில் போராட்டம்

In இலங்கை
Published: 07:23 GMT, Oct 26, 2017 |
0 Comments
1226
This post was written by : Elakkiya

யாழ் மாவட்ட மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தினை முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விசேட கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மாவட்ட முஸ்லிம் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு என மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 200 வீட்டுத் திட்டத்தில் இதுவரை 20 பேருக்கு மாத்திரமே வீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனையோருக்கு பல்வேறு காரணங்களினால் வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

90 ஆம் ஆண்டளவில் வெளியேற்றப்பட்டு கடுமையான இடப்பெயர்வுகளை சந்தித்த பின்னர் தற்போது சொந்த வாழ்விடம் திரும்பியுள்ள தமக்கு கடும்போக்குடன் செயற்பட்டு வீட்டுத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுவழங்கலில் சுமூகமான போக்கினை கடைப்பிடித்து தமக்கான வாழ்விடத்தை அமைக்க சகல தரப்பினரும் உதவ முன்வர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரத்திடம் கையளித்துள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த வட.மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின், இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

IMG-1057

IMG-1059

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg