Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தேசிய மீலாத் விழா’ தொடர்பில் கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 07:49 GMT, Oct 26, 2017 | Published: 07:49 GMT, Oct 26, 2017 |
0 Comments
1271
This post was written by : Elakkiya

வடக்கை மையமாக கொண்டு யாழ். மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொள்வுள்ளதாக தபால்துறை அஞ்சல் அலுவல்கள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைத்து 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் முஸ்லிம்களுக்கான போக்குவரத்து, சுகாதார ஏற்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதுடன் கலாசார நிகழ்வுகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

யாழ் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதிகள், வட.மாகாண பள்ளிவாசல் நிர்வாகிகள் சங்கத்தினர், வட.மாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் பொலிஸார், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg