பயங்கரவாதக் குற்றச்சாட்டு: மனித உரிமை ஆர்வலர்கள் விடுவிப்பு!
This post was written by : Risha

சர்வதேச மன்னிப்பு சபையின் உள்ளூர் பணிப்பாளர் உட்பட எட்டு மனித உரிமை ஆர்வலர்களை துருக்கி நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த எட்டு பேர் மீதான விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்தான்புல் கடற்கரை தீவொன்றில் நடைபெற்ற டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த செயலமர்வின் நிறைவில் குறித்த எட்டு பேரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படின், அவர்களுக்கு 15 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.