Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

`சத்யா’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

In சினிமா
Published: 10:11 GMT, Oct 26, 2017 |
0 Comments
1928
icon_com
This post was written by : Vithushagan

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் மற்றும் ரம்யா நம்பீசன், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்யா’  திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரிப்பில் ‘சைத்தான்’ பட இயக்கினர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மேலும், வரலட்சுமி, ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திகில் பாணியில் உருவாகி இருக்கும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் மீள் உருவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான `சத்யா’ படத்தின் ட்ரெய்லர் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg