Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு!

In இலங்கை
Updated: 13:32 GMT, Oct 26, 2017 | Published: 13:32 GMT, Oct 26, 2017 |
0 Comments
1350
This post was written by : Vithushagan

டயகம கிழக்கு தோட்டத்தின் முதலாம் பிரிவில் ஆகுரோயா ஆற்றிலிருந்து 2 வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை தனது வீட்டிற்கு பின்புறமாக உள்ள ஆற்றில்  மூழ்கிய குழந்தை, அந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

வீரதிருமகன் டிலுஷி என்ற 2 வயதுடைய பெண் குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC02064 DSC02070

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg