Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதிக்கட்ட பிரெக்சிற் மீதான வாக்களிப்பில் தெரேசா மே உறுதி

In
Updated: 11:34 GMT, Oct 27, 2017 | Published: 11:33 GMT, Oct 27, 2017 |
0 Comments
1233
This post was written by : Suganthini
thereasa

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு முன்னர், இறுதிக்கட்ட பிரெக்சிற் ஒப்பந்தம் மீதான வாக்களிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) நடைபெற்ற பிரெக்சிற் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றியபோது ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்துள்ளேன்’ என்றார்.

‘எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ளது. இந்த இரண்டு வருட காலத்துக்குள் செயற்படுத்தும் திட்டங்களை நாம் கோருகின்றோம். ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும்போது, பெரும்பாலும் அதன் அணுகலில் மாற்றங்கள் ஏற்படாது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg