Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

In இலங்கை
Updated: 15:05 GMT, Oct 27, 2017 | Published: 15:05 GMT, Oct 27, 2017 |
0 Comments
1271
This post was written by : Vithushagan

16 வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி ஏமாற்றிய குற்றத்திற்காக முல்லைதீவு இளைஞனொருவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைதீவு – மாங்குளம், ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் 2011ஆம் ஆண்டு ஜீலை மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் பெண்பிள்ளை ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை காதலித்து ஏமாற்றி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமி ஒரு குழந்தைக்கு தாயாக்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் முடிப்பார் என காத்திருந்த சிறுமி, அவர் வேறு திருமணம் முடித்து விட்டார் என்பதனை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டினையடுத்து அந்த நபரை கைது செய்த முல்லைதீவு பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று கடந்த se ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, சாட்சியங்கள் மன்றினால் பரிசீலிக்கப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த இளைஞன் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பபளிக்கப்பட்டது.

அத்துடன் பிறந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவை செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg