Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் வீடமைப்பு திட்டங்களுக்கு இந்தியா நிதி உதவி!

In இலங்கை
Published: 16:40 GMT, Oct 27, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Vithushagan
4a122584fa6cd9cb0504fe8994d118fb_XL

இலங்கையின் வீடமைப்பு  திட்டங்களுக்கு இந்தியா 60 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிரிபோபுர பிரதேசத்தில் ‘சந்தோஷகம’ என்ற பெயரிலான 44ஆவது கிராமம் நேற்று (வியாழக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது இந்தியாவும் இலங்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. குறித்த உடன்படிக்கையின் கீழ் 1200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 600 வீடுகள் தென்மாகாணத்திலும், ஏனைய வீடுகள் 25 மாவட்டங்களிலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராம சக்தி மாதிரி கிராம வீடமைப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg