Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யாவில் தேர்தலுக்கு பின்னரும் பதற்றம்: ஐவர் உயிரிழப்பு

In உலகம்
Published: 07:46 GMT, Oct 28, 2017 |
0 Comments
1237
This post was written by : Suganthini

கென்யாவில் மீளவும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டபோதும், அங்கு தொடரும் கலவரத்தில் சிக்கி இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கென்யாவின் தலைநகரான நைரோபியில் பொலிஸாருக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலவரத்தின்போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கென்யாவில் நேற்றுமுன்தினம் முதல் கலவரம் இடம்பெற்றுவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அதேவேளை, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்கா தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.

இந்தத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறி எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடின்கா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, கென்யாவில் நேற்றுமுன்தினம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.

இருப்பினும், இந்தத் தேர்தலுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg