Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னின் கட்டுப்பாட்டுக்குள் கதலோனிய அரசாங்கம்

In
Published: 12:18 GMT, Oct 28, 2017 |
0 Comments
1156
This post was written by : Suganthini
spain 11

கதலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தை கலைத்த ஸ்பெய்ன் அரசாங்கம், கதலோனிய அரசாங்கத்தின் பொறுப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.

ஸ்பெய்னிலிருந்து கதலோனியா பிரிந்து தனி நாடாகுவதற்கு கதலோனியா நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) வாக்களிப்பு இடம்பெற்றது. இதனை அடுத்து, ஸ்பெய்ன் அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஸ்பெய்ன் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘கதலோனியா பிராந்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், கதலோனிய பிராந்திய நிர்வாகம் ஸ்பெய்ன் துணைப் பிரதமர் சொரயா சைன்ஸ் டி சாண்டாமரியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்வரப்படுகின்றது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கதலோனியாவின் சிரேஷ்ட அதிகாரிகள், ஸ்பெய்ன் அரசாங்கத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். கதலோனிய நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகவும், கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட்  (Carles Puigdemont)    தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாகவும் ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் நேற்று அறிவித்திருந்தார். மேலும், அங்கு தேர்தல் நடத்துவதற்கும் அவர் அறிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg