Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் வருமா தொண்டமானின் பெயர்? – இன்று தீர்மானம்!

In இலங்கை
Updated: 06:24 GMT, Oct 29, 2017 | Published: 03:40 GMT, Oct 29, 2017 |
0 Comments
1374
This post was written by : Varshini

ஹட்டனில் இயங்கிவந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமென மாற்றியமை தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆறாயிரம் வீடுகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டனில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவ்விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1998ஆம் ஆண்டு அப்போதைய சந்திரிகா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் இயங்கிய நான்கு நிலையங்களும், மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வியை வழங்கிவந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில், பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ள அதேவேளை, இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே அமைச்சரவை அங்கீகாரத்துடன் பெயர்மாற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமரர் தொண்டமானின் பெயரை நீக்கியதைத் தொடர்ந்து, மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இவ்விடயம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் இவ்விடயம் குறித்து தீர்மானிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg