Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவுடனான பிணைப்பை அதிகரிக்கும் இந்தியா! – விரைவில் முக்கிய சந்திப்பு

In இந்தியா
Updated: 05:40 GMT, Oct 29, 2017 | Published: 04:32 GMT, Oct 29, 2017 |
0 Comments
1533
This post was written by : Varshini

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி கிழக்கு ஆசிய உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி அங்கு செல்லவுள்ள அதே நேரத்தில், சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி மணிலா செல்லவுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளதோடு, முக்கிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

குறிப்பாக, தீவிரவாத ஒழிப்பு, தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்ட பல விடங்கள் முக்கிய இடத்தை பெறவுள்ளன.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டீஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸள் ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் மோடியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg