Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – கியூபா

In உலகம்
Published: 05:41 GMT, Oct 29, 2017 |
0 Comments
1248
This post was written by : Suganthini
us

ஹவானாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை இலக்குவைத்து மர்மான முறையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என, கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புரூனோ ரோக்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஹவானாவிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை இலக்குவைத்து மர்மான முறையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. இது இந்த இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவை சீர்குலைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியாகவோ நான் கருதுகின்றேன்’ என்றார்.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், இது முற்றிலும் தவறானது ஆகும் எனவும் கூறியுள்ளார்.

ஹவானாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரிகள், தேக ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் ஒருவகையான தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் இவர்களைக் காப்பாற்றுவதற்குப் போதிய நடவடிக்கைகளை எடுக்க கியூபா அரசாங்கம் தவறியதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. அத்துடன், ஹவானாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோரை அமெரிக்கா மீள அழைத்திருந்தது,

இதனை அடுத்து, வொஷிங்டனிலுள்ள கியூபாவின் தூதரகத்தில் பணியாற்றிவந்த 15 அதிகாரிகளை வெளியேறுமாறும் அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடான நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg