Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போத்தலினால் உடலை கிழித்த இலங்கை அகதி வைத்தியசாலையில் அனுமதி!

In இந்தியா
Published: 08:59 GMT, Oct 29, 2017 |
0 Comments
1820
This post was written by : Kemasiya

இலங்கை அகதியாக தன்னை அங்கீகரிக்ககோரி உடல் முழுவதும் போத்தலினா்ல காயம் ஏற்படுத்தியவாறு இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவா் போராட்டம் நடத்தியுள்ளார்.

தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமிற்குள் தன்னை அனுமதிக்க கோரி, நேற்று (சனிக்கிழமை) அஜய் என்னும் இலங்கையின் தலைநகர் கொழும்பை  சேர்ந்த (வயது-24) இளைஞரே மேற்கண்டாவாறு போராடியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, இந்தியாவின் தனுஷ்கோடிப் பகுதிக்கு சட்டவிரோதமாக நுழைந்த அஜய், பொலிஸாரால் கைது செய்யப்பட்தோடு கடவுச்சீட்டு வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் தண்டனையை தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மண்டபத்தில் உள்ள அகதிமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த முகாமில் இருந்து திடீரென காணாமல் போன இளைஞர்,  மீண்டும் நேற்றயதினம் மண்டப முகாமிற்கு வந்து, அங்கிருந்த அதிகாரியிடம், தான் இலங்கை அகதி எனவும், தன்னை இலங்கை அகதி முகாமில் சேர்க்கும்படி கோரியும், உடல்முழுதும் போத்தல் ஓடுகளால் கீறி காயப்படுத்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளார்.

உடல் காயங்களினால் அவதிப்பட்டவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg