Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானின் துணை ஆளுநர் கடத்தப்பட்டுள்ளார்

In உலகம்
Updated: 08:12 GMT, Oct 29, 2017 | Published: 08:06 GMT, Oct 29, 2017 |
0 Comments
1295
This post was written by : Suganthini

ஆப்கானிஸ்தானின் துணை ஆளுநர் ஒருவர், பாகிஸ்தானில் இனந்தெரியாதோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

குனார் மாகாணத்தின் துணை  ஆளுநரான முஹம்மட் நபி அஹமடி என்பவரே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

தனது சகோதரருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) சென்ற இவர், பாகிஸ்தானின் பெஷவார் நகர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று  வந்த    இனந்தெரியாதோரால் காரில் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர் கடத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள குனார் மாகாண ஆளுநர் அப்துல் கிஹானி முஸாமெம் Abdul Ghani Musamem), அவர் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காகவே பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg