Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி! – நிர்வாகம் மாறியது

In இலங்கை
Updated: 11:33 GMT, Oct 29, 2017 | Published: 09:29 GMT, Oct 29, 2017 |
0 Comments
2723
This post was written by : Varshini
9

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதோடு, அதனை லாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்ததால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் பங்குதாரர்களான நெவில் பெர்ணான்டோ மற்றும் அவரது குடும்பத்தார், எந்த வகையிலும் செயற்பட முடியாது என்பதோடு, உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் இந் நிறுவனம் கொண்டுவரப்படவுள்ளது.

சைட்டம் என்பது நிறுவனத்தின் பெயராக இருந்த நிலையில், புதிய நிர்வாக கட்டமைப்பில் அது மருத்துவ பீடத்தின் பெயராக மாத்திரமே அமையும். அதற்கேற்ப, விரைவில் சட்டமூலங்கள் தயாரிக்கப்படவுள்ளன.

சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். அத்தோடு, ஊழியர்களும் மாற்றப்படுவர். மேலும், மருத்துவ பயிற்சி மற்றும் கல்வியில் குறைந்தபட்ச நியமங்களை கடைப்பிடிக்கும் நிறுவனமாக புதிய நிறுவனம் செயற்படும்.

புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்கள், புதிய நிறுவனத்தால் கோரப்படும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.

சைட்டத்தில் ஏற்கனவே பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள், தமக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையென உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கேற்ப, இலங்கை மருத்துவ சபையின் ஆலோசனையுடன், அரச வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சியை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.

சைட்டத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடைமுறை, உயர்கல்வி அமைச்சினால் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும், புதிய நடைமுறைகளின் பிரகாரமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் நிறுவனத்தின் பங்குதாரர்களாக தற்போது உள்ளவர்கள், குறிப்பாக நெவில் பெர்ணான்டோ மற்றும் அவரது குடும்பத்தார் புதிய நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் உரிமத்தில் எந்த வகையிலும் தொடர்புபடக் கூடாது.

இவ்விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதோடு, அதன் பின்னர் இதற்கான சட்டமூலங்கள் தயாரிக்கப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையை தீர்ப்பதில் அரசாங்கம் பாரிய நெருக்கடியை சந்தித்திருந்தது. நாள்தோறும் போராட்டங்கள் வலுத்ததோடு, இலங்கை மருத்துவ சபையும் இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டது. இந்நிலையில், அண்மையில் இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் பின்னர், சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg