Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தமானி அறிவித்தல்களின் பின்னர் தேர்தல் நடத்தப்படும்: எம்.எம். முஹம்மத்

In இலங்கை
Updated: 12:52 GMT, Oct 29, 2017 | Published: 12:52 GMT, Oct 29, 2017 |
0 Comments
1196
This post was written by : Anojkiyan

இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளிவந்ததன் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பை தேர்தல் ஆணைக்குழு ஏற்கும் என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் கலப்புத் தேர்தல் முறை சட்ட ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் ஆணைக்குழு சட்டத்தை இயற்றுவதில்லை. சட்டத் திருத்தம் செய்வதுமில்லை. தேர்தல் ஆணைக்குழு நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே கவனத்தைச் செலுத்தும்.

அதேவேளை, எல்லை நிர்ணயம் சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள அச்சுப் பிழைகளையும் இன்ன பிற தவறுகளையும் திருத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிக விரைவில் இரண்டு வர்;த்தமானி அறிவித்தல்கள் வர இருக்கின்றன. அவை வெளிவந்ததும் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சாரும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg