Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்!

In இலங்கை
Updated: 02:58 GMT, Oct 30, 2017 | Published: 02:57 GMT, Oct 30, 2017 |
0 Comments
1225
This post was written by : Varshini
parliament

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10.30இற்கு ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறவுள்ள இவ்விவாதம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக பிரதமர் ரணில் தலைமையில் 21 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, இக்குழு சுமார் 72 தடவைகள் கூடின. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கோரப்பட்டு, இறுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த மாதம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நாட்டிற்கு பாதகமாக உள்ளதென கூட்டு எதிரணி குறிப்பிடுகிறது. அத்தோடு, தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg