Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்!

In
Updated: 07:24 GMT, Oct 30, 2017 | Published: 03:56 GMT, Oct 30, 2017 |
0 Comments
1442
This post was written by : Varshini
maveerar day (2)

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க புலம்பெயர் தமிழர்களும் தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பிரித்தானியா ஒக்ஸ்போட்டில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாபெரும் சிரமதான பணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 100இற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர் வாழும் நாடொன்றில் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பில் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதானது, தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமையென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகப் பிரிவு செயற்பாட்டாளரான அஜந்தன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க பாரிய கெடுபிடிகள் காணப்பட்டு வந்த நிலையில், இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் அந்நிலை ஓரளவு மாற்றம் கண்டுள்ளது. அந்தவகையில், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மாவீரர் இல்லங்களில் கடந்த காலங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

maveerar day (3) maveerar day (1) maveerar day (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg