Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த அணிக்கு அடுத்த அடி – மற்றுமொருவரின் பதவி பறிக்கப்பட்டது!

In இலங்கை
Published: 04:13 GMT, Oct 30, 2017 |
0 Comments
2013
This post was written by : Varshini
Final Day Of Campaigning In Sri Lanka Ahead Of General Election 2015

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்த துலிப் விஜேசேகர, அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பிரகாரம், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் துலிப் விஜேசேகர, அண்மைய காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்ததோடு, மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணிக்கு ஆதவராக கருத்துக்களை கூறி வந்தார். இதன் பின்னணியிலேயே குறித்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடுபவர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் என அண்மைய காலமாக சுதந்திரக் கட்சியிலுள்ள பலரது பதவிகள் பறிக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg