Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்: எட்டாவது முறையாக ஃபெடரர் சம்பியன்

In டெனிஸ்
Published: 04:21 GMT, Oct 30, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Risha

சுவிட்சர்லாந்தின் பசேல் நகரில் நடைபெற்றுவந்த சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் ஃபெடரர் எட்டாவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்றார்.

48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், ஆர்ஜன்டீனாவின் டெல் போர்டோவை எதிர்கொண்ட ரொஜர், 6-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதற்கு முன்னதாக கடந்த 2006, 2007, 2008, 2010, 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் ஃபெடரர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும், டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ரொஜர் ஃபெடரர் வெல்லும் 95ஆவது சம்பியன் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg