Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிபதி இளஞ்செழியனுக்கு பௌத்த சங்க பேரவை வழங்கியுள்ள கௌரவம்!

In இலங்கை
Published: 04:33 GMT, Oct 30, 2017 |
0 Comments
1568
icon_com
This post was written by : Varshini
Judge M.Elancheliyan

இன, மத, மொழி வேறுபாடின்றி நீதித்துறையில் சிறந்த சேவைகளை வழங்கி வரும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகலவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க பேரவையின் 14ஆவது மாநாட்டின் போது, இவர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மேற்குறித்த இரு நீதிபதிகளுக்கும் அஸ்கிரிய மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரக்காகொட ஞானரத்ன தேரர் விசேட நினைவுச் சின்னங்களை வழங்கிவைத்தமை சிறப்பம்சமாகும்.

நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு, இவர்களைப் போன்ற நீதிபதிகளின் சேவை மாபெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளதென இதன்போது அஸ்கிரிய மகாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமல்லாது சமூக நன்மைகளையும் கருத்திற்கொண்டு நீதிபதி இளஞ்செழியன் வழங்கி வரும் தீர்ப்புகள், தமிழர்களை மட்டுமன்றி தென்னிலங்கை சமூகத்தினரிடையேயும் வெகுவாக பாராட்டை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg