Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள்! – டக்ளஸ் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 08:42 GMT, Oct 30, 2017 | Published: 07:24 GMT, Oct 30, 2017 |
0 Comments
1554
This post was written by : Varshini

தன்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடச் சென்றிருந்த போது, டக்ளஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பத்தரை வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த போதே, டக்ளஸ் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

தமது நிலைப்பாட்டை, வழக்கு விசாரணை நடைபெற்ற போதே தெரிவித்ததாக டக்ளஸ் கூறியுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் 16 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எமில்காந்தன் உள்ளிட்ட 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் மீதான தாக்குதல்: அறுவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், 19 வருடங்களின் பின்னர் ஆறு பேருக்கு பத்தரை வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் 16 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 9 பேர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஞ்சிய ஆறு பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடன் கைதுசெய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா மீது, களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg