Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: சுகாதார அமைச்சர்

In இலங்கை
Updated: 08:43 GMT, Oct 30, 2017 | Published: 08:43 GMT, Oct 30, 2017 |
0 Comments
1248
This post was written by : Risha
625.0.560.320.160.600.053.800.700.160.90

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துவரும் அதேவேளை, குறித்த பகுதிகளில் மலேரியா காய்ச்சலை காவிச்செல்லும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், மக்களுடைய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்த இயலாது.

வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ள அதேவேளை, யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் இரு மரணங்களும் சம்பவித்துள்ளன.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. விசேடமாக வெளி மாவட்டங்களில் இருந்து சுகாதார பணியாளர்கள் யாழ். மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ். மாவட்டத்தில் முதலில் புகைரத நிலைய பகுதியில் மலேரியா நுளம்பு அடையாளம் காணப்பட்டது. அதனை தொடர்ந்து நல்லூர் பகுதியிலும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும், மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் மழை காலம் ஆரம்பமாவதால் பொதுமக்கள் விழிப்பாக செயற்படவேண்டும். மக்கள் விழிப்புடன் செயற்பட்டு நுளம்பை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg