Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் விக்ரம் மகளுக்கு திருமணம் – நடத்தி வைத்தார் கலைஞர்

In சினிமா
Updated: 09:47 GMT, Oct 30, 2017 | Published: 09:41 GMT, Oct 30, 2017 |
0 Comments
4449
This post was written by : elayathambi

தி.மு.க தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று திருமண நாள். கலைஞரின் கொள்ளுப் பேரனான மனோரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்குமான திருமணம் இன்று கோபாலபுரம் இல்லத்தில் மிக எளிமையாக நடத்தி வைக்கப்பட்டது.

உடல் நிலை காரணமாக பல காலமாக எந்த வைபவத்திலும் கலந்து கொள்ளாத கலைஞர் கருணாநிதி,  இன்று தனது கொள்ளுப் பேரனின் திருமணத்தை, நடத்தி வைத்திருக்கிறார். அரசியல் தலைவர்களோ அல்லது பிரமுகர்களோ கலந்து கொள்ளாத இந்தத் திருமண விழாவில் குடும்ப அங்கத்தினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

இவ் விழாவில் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, செல்வி குடும்பத்தினர், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின், தயாநிதிமாறன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம், முரசொலி செல்வம் ஆகியோரோடு கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றிருந்தார்.

மணமகன் மனோரஞ்சித் கலைஞரின் மகனான மு.க.முத்துவின் மகள் வழிப்பேரனாவார். இத் திருமணம் இன்று காலை 10.25 இற்கு கலைஞர் கையால் தாலி பெற்று, தமிழ் முறைப்படி நடத்தப்பட்டிருக்கிறது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg