Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்ய தேர்தலில் கென்யாட்டா தலைமையிலான கட்சி முன்னிலை

In உலகம்
Published: 10:39 GMT, Oct 30, 2017 |
0 Comments
1250
This post was written by : Suganthini
kenya 22

கென்யாவில் மீண்டும் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா தலைமையிலான ஜுபிலி கட்சி அதிகளவான வாக்குகளைப் பெற்று முன்னிலையிலுள்ளது.

கடந்த 26ஆம் திகதி கென்யாவில் ஜனாதிபதித் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டதில், 291 தொகுதிகளில் இதுவரையில் 244 தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி கென்யாட்டா தலைமையிலான ஜுபிலி கட்சியானது, சுமார் 98 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் மற்றும் எல்லை ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீண்டும் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலை எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்கா பகிஷ்கரித்துள்ளதுடன், அவரது ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறைந்தபட்சம் 23 தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு நிலையத்தைக் கூட தேர்தல் அதிகாரிகளால் திறக்க முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், இறுதித் தேர்தல் முடிவுகளை கென்ய மக்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg