Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமைகளினால் தீர்வில்லை- போராட்டத்தில் குதித்த மலையக மக்கள்

In இலங்கை
Updated: 11:40 GMT, Oct 30, 2017 | Published: 11:40 GMT, Oct 30, 2017 |
0 Comments
1293
This post was written by : Risha

குன்றும் குழியுமாக காணப்படும் தமது தோட்டப் பகுதிக்கு செல்லும் வீதியை திருத்தி தருமாறு கோரி, கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொலபத்தனை கொங்காலை தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மலையக அரசியல்வாதிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு எட்டப்படாத நிலையிலேயே மக்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டப்பகுதிக்கு செல்லும் 4 கிலோ மீற்றர் பிரதான வீதி பல வருடகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதியூடாக பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த மக்கள் அவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர். பல வருடங்களாக சீர்த்திருத்தப்படாத நிலையில் காணப்படும் குறித்த வீதியை புனரமைத்து தருமாறு பலமுறை மலையக அரசியல்வாதிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தமக்கு தீர்வு எட்டப்படாத நிலையிலேயே மக்கள் இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர்வரை கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC02336 DSC02348

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg