Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

600,000 மக்கள் வலிகாமத்தில் இருந்து வெளியேறிய நாள் இன்று 30.10.1995

In இலங்கை
Updated: 17:20 GMT, Oct 30, 2017 | Published: 12:22 GMT, Oct 30, 2017 |
0 Comments
3112
This post was written by : S.K.Guna

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000 க்கும் அதிகமான மக்கள் 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி இரவு நேரம் வெளியேறினர்.

சந்திரிகா குமாரணதுங்க அவர்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணக் குடாநாட்டினை இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்முகமாக பலாலி மற்றும் அச்சுவேலியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட “ரிவிரெச” என்னும் சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையினால் வலிகாமம் வாழ் மக்கள் தமது சொத்துக்கள் உடைமைகள் அத்தனையையும் விட்டு விட்டு தம்மை காப்பாற்றிக் கொள்ளும் முகமாக ஒரு இரவில் வெளியேறிய நாள் இன்றாகும்.

கடுமையான ஷெல் தாக்குதல்கள் குடாநாட்டினை அதிர வைத்துக்கொண்டிருந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி 1995 ஆம் ஆண்டு மாலை 6 மணிக்கு பின்னராக,  மக்களை  தமது வீடுகளில் இருந்து  வெளியேறி தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளுக்குச் செல்லுமாறு  விடுதலைப் புலிகளால்  ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அறிவித்தல்  விடுக்கப்பட்ட  அடுத்த வினாடியே செய்வதறியாது தவித்த  மக்கள்  தமது சொத்துக்கள், உடைமைகள், வளர்த்த செல்லப்பிராணிகள், கால்நடைகள்  அத்தனையையும்   விட்டு விட்டு தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் செம்மணியூடாக அங்குலம் அங்குலமாக  நகர்ந்து சென்றனர்.

கடுமையான மழைக்கும் வெள்ளத்துக்கும் மத்தியில் சிக்கித் தவித்த மக்களில் வயோதிபர்கள் மற்றும் சில நோய்வாய்ப்பட்டவர்கள் செம்மணி வீதியிலேயே மரணத்தை தழுவிக்கொண்டனர்.

உயிர்பிழைத்தவர்கள் தென்மராட்சி, வடமராட்சி மற்றும் வன்னிப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஈழத்து தமிழினத்தின் வரலாற்றில் மிகப் பெரும் அவலமும் இடப்பெயர்வும் நடந்த வரலாறாக இந்தச் சம்பவம் பதிவாகியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg