Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அங்கவீனமடைந்த பொலிஸாருக்கு நடமாட்ட துணை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

In இலங்கை
Published: 12:39 GMT, Oct 30, 2017 |
0 Comments
1132
This post was written by : Anojkiyan
150 years Canada

யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த அசம்பாவிதங்களின் போது அங்கவீனமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸாருக்கு நடமாட்டத்திற்குத் துணை புரியும் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ரணவிரு சேவா அதிகார சபையினால் இன்று (திங்கட்கிழமை) குறித்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் அங்கவீனமடைந்த பொலிஸாரில் ஒருவருக்கு சக்கர நாற்காலியும், மற்றுமொருவருக்கு ஊன்றுகோலும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் ரணவிரு சேவா நலனோம்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமன் திலகரெத்ன, ரணவிரு சேவா குடும்பங்களின் பயனாளிகளான அங்கவீனமடைந்த பொலிஸாரும் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg