Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்பிட்டியில் உள்ளூர் மீனவர்கள் எழுவர் கைது

In இலங்கை
Updated: 03:58 GMT, Oct 31, 2017 | Published: 03:00 GMT, Oct 31, 2017 |
0 Comments
1493
This post was written by : Arul Jesu

புத்தளம், கற்பிட்டி கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பாவித்தும் அனுமதி பத்திரம் இன்றியும் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழுவரை நேற்று மாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மீனவப் படகுகளுடன் தடை செய்யப்பட்ட ஹெம்பிலி எனும் வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 160 கிலோ கிராம் மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களும்,   மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட உதவி கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், அடுத்த மாதம் 06 திகதி புத்தளம் மாவட்ட நீதிமனற்த்தில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

IMG-20171030-WA0032 IMG-20171030-WA0033

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg