Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யாவில் ஜனாதிபதி தேர்தல்: கென்யாட்டா மீண்டும் வெற்றி பெற்றார்

In உலகம்
Published: 04:29 GMT, Oct 31, 2017 |
0 Comments
1162
This post was written by : Suganthini

கென்யாவில் மீண்டும் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கென்யாவில் கடந்த 26ஆம் திகதி மீண்டும் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியான கென்யாட்டா 7.48 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் 98.3 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்கா 73,228 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

கென்யாவில் நிலவிய வன்முறை காரணமாக 25 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக மொத்தமாக 19.6 மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டபோதிலும், 7.6 மில்லியன் வாக்காளார்களே வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் தேர்தல்கள் ஆணையகம் நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்காக உரையாற்றிய ஜனாதிபதி கென்யாட்டா, தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் சமாதானத்தைப் பேணி நடக்க நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg