Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனியை விமர்சிக்க வேண்டாம்: ராகுல் டிராவிட்

In கிாிக்கட்
Updated: 09:10 GMT, Oct 31, 2017 | Published: 09:09 GMT, Oct 31, 2017 |
0 Comments
1537
This post was written by : Elakkiya
Rahul-Dravid

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனியின் ஓய்வு தொடர்பில் இரசிகர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் ஓய்வு முடிவை தோனியே எடுப்பார் ஒன்றும் இது குறித்து விமர்சிக்க வேண்டாம் என்றும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் வெற்றிகரமான அணித்தலைவரான தோனி, இரண்டு உலகக்கிண்ணங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு வீரராவார். 2014 ஆம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினார். எனினும் அணியில் வீரராக இடம்பெற்றுள்ளார்.

அண்மைக்காலமாக இவருடைய விளையாட்டு திறன் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடர் வரை இவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குரியதாகியுள்ளது.

2019 உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாகவே தோனி ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று விமர்சிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட், “தோனி, விராட்கோஹ்லி போன்ற சிறந்த வீரர்கள் தங்கள் ஓய்வை தாமே தீர்மானிப்பர். தோனியின் ஓய்வு குறித்து இரசிகர்கள் இடையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. ஆனால் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்தால் இந்திய அணிக்காக அவர் விரும்பும் வரை விளையாட முடியும். இதனால் தோனியை விமர்சிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg