Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி பூரண ஹர்த்தால்

In இலங்கை
Published: 15:35 GMT, Oct 31, 2017 |
0 Comments
1194
This post was written by : JudeDanish

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்திய, பூரண ஹர்த்தால் இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வீதி மறியல் போராட்டமும் இடம்பெற்றது. கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக பெரும் திரளான பொது மக்கள் வீதியில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் சாய்ந்தமருது நெடுஞ்சாலை ஊடான கல்முனை- அம்பாறை, கல்முனை- அக்கரைப்பற்று பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்திருந்தன.இதனால் அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

பூரண ஹர்த்தால் காரணமாக வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. சாய்ந்தமருது பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் எவையும் இயங்கவில்லை.

இந்த ஹர்த்தாலை முன்னிட்டு சாய்ந்தமருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் சுவரோட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், ஜம்மியத்துல் உலமா சபை, வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்த செயலணியின் அழைப்பின் பேரில் இந்த போராட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg