Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கிச் சூட்டில் ஐவர் படுகாயம்: அம்பலங்கொடையில் பதற்றம்!

In இலங்கை
Published: 17:34 GMT, Oct 31, 2017 |
0 Comments
1238
This post was written by : Surenth
shooting

இலங்கையின் அம்பலங்கொடை, படபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை, அம்பலங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg