Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எட்மன்டன் நகர பேரூந்தில் கத்திக்குத்து: இருவர் படுகாயம்

In கனடா
Updated: 18:00 GMT, Oct 31, 2017 | Published: 17:57 GMT, Oct 31, 2017 |
0 Comments
1401
This post was written by : S.K.Guna

எட்மன்டன் நகர பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எட்மன்டன் டிரான்சிற் சேவை பேரூந்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரை தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த இரு சந்தேகநபர்களும் 20 வயதுக்கு குறைந்த கருப்பினத்தவர்கள் என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தமக்கு அறியத்தருமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg