Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனக் கலகத்தில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவீர்!

In இலங்கை
Published: 18:04 GMT, Oct 31, 2017 |
0 Comments
1546
This post was written by : Surenth
news -4

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்துள்ளார்.

கிழக்கில் சமீக காலமான கட்டவிழ்த்து விடப்படும் இன முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக, அண்மையில் மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர்களை உடன் கைதுசெய்யுமாறு பொலிஸாரை பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் வன்முறைகள் ஏற்படாத வண்ணம் பொலிஸார் எந்நேரமும் உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், பொதுமக்களும் சட்டத்தை கையில் எடுக்காமல் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg