Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி காத்தான்குடியில் பேரணி!

In இலங்கை
Updated: 18:12 GMT, Oct 31, 2017 | Published: 18:12 GMT, Oct 31, 2017 |
0 Comments
1272
This post was written by : Surenth

வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான பேரணியொன்று, மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ‘வாசிப்பின் மூலம் நவீன உலகை வெற்றிக்கொள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும், வாசிப்பின் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும், காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் வாசிப்பு தொடர்பான தெளிவூட்டல்களும் போட்டிப் பரீட்சைகளும் நடத்தப்பட்டன. அதன் இறுதி நாள் நிகழ்வாகவே இன்றைய ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில், காத்தான்குடி நகரசபை பொது நூலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்

மட்டக்களப்பு – காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி நகரசபை செயலாளர் எஸ்.எச்.எம்.சபீ தலைமையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg