Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார் ட்ரம்ப்

In
Published: 05:07 GMT, Nov 5, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Suganthini

ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜப்பான் பிரதமர் அபேயும் இணைந்து கோல்ப் விளையாடவுள்ளனர்.

ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு 12 நாட்களைக் கொண்ட சுற்றுப்பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி தென்கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், தேசிய மாநாட்டிலும் உரையாற்றவுள்ளார்.

இதனை அடுத்து, எதிர்வரும் 8ஆம் திகதி சீனாவுக்குச் செல்லும் அவர், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதுடன், அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி வியட்நாமுக்குச் செல்லும் அவர், ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், வியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவங் (Tran Dai Quang) மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி பிலிப்பைன்ஸுக்குச் செல்லும் அவர், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், எதிர்வரும் 13ஆம் திகதி மணிலாவில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிக்கோ டூர்ட்டே (Rodrigo Duterte) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

தனது ஆசியாவுக்கான விஜயத்தின்போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும், வடகொரிய நெருக்கடியைக் கையாள ரஷ்ய ஜனாதிபதியின் ஒத்துழைப்பைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளுக்கு மத்தியில ஆசிய நாடுகளுக்கான இவரது சுற்றுப்பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

trump1
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg