Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னையில் இன்றும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

In இந்தியா
Updated: 06:19 GMT, Nov 5, 2017 | Published: 06:19 GMT, Nov 5, 2017 |
0 Comments
1537
This post was written by : Surenth

சென்னை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் அடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் அடைமழை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடைமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் பாலச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg