Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – ஜேக் சொக் மற்றும் பிலிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி

In டெனிஸ்
Published: 06:56 GMT, Nov 6, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Puvanes
jack001

பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சம்பியன் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜேக் சொக், பிலிப் கிரஜினோவிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

குறித்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி ஒன்றில் அமெரிக்காவின் ஜேக் சொக் பிரான்சின் ஜூலியன் பென்னெட்யூ ஆகியோர் பலபரீட்சை நடத்தினர்.

இதில் அதிரடியாக விளையாடிய சொக் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஒன்பதாம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜோன் இஸ்னர் செர்பியாவின் பிலிப் கிரஜினோவிக்குடன் மோதினார்.

விறுவிறுப்பாக நகர்ந்த போட்டியில் ஆரம்பத்தில் ஜோன் முன்னணி வகித்தாலும் பின்னர் அதிரடியாக ஆடிய கிரஜினோவிக் 6-4, 6-7, 7-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இதற்கமைய இறுதிபோட்டிகளில் ஜேக் சொக் மற்றும் பிலிப் கிரஜினோவிக் ஆகியோர் பலபரீட்சை நடத்தவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg