Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளி. மக்களுக்கு நிரந்தர வாழ்வாதார கொடுப்பனவு: சந்திரகுமார் கோரிக்கை

In இலங்கை
Updated: 07:42 GMT, Nov 7, 2017 | Published: 07:41 GMT, Nov 7, 2017 |
0 Comments
1239
This post was written by : Risha

வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சமூர்த்தி திட்டம் போன்று, நிரந்தரமான வாழ்வாதார உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி இத்தாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது என்றுமில்லாத அளவு வறுமைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர். ஆனால், இம்மக்களின் மேம்பாட்டுக்கு அதிகார தரப்பினர்களிடம் எவ்வித மாற்றுத் திட்டங்களும் இல்லை.

முக்கியமாக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இன்று பலர் தொழில் வாய்ப்புக்களுக்காக தென்னிலங்கை நோக்கி சென்று அளெகரியங்களையும், நெருக்கடிக்களையும் எதிர்நோக்கியுள்ளனர். இதுவொரு ஆரோக்கியமான நிலைமை அல்ல. இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடு.

எமது சமூகத்தில் பெண்த் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுவலுவுள்ளோர் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளை யுத்தத்தில் பலிகொடுத்தவர்களின் குடும்பங்கள் ஆகியன பெரும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளன. இந்தக் குடும்பங்களுக்கு சமூர்த்தி திட்டம் போன்று நிரந்தரமான வாழ்வாதார உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன்” என்றார்.

20171028_175710

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg