Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கால் பந்து ஜாம்பவானுக்கு ஏற்பட்ட நிலை! – மனமுடைந்து நிற்கும் ரொனால்டோ

In உதைப்பந்தாட்டம்
Published: 07:21 GMT, Nov 7, 2017 |
0 Comments
1581
icon_com
This post was written by : Puvanes
ronaldo001

அண்மைய போட்டிகளில் கோல் அடிக்க முடியாத காரணத்தினால் ரொனால்டோ மனமுடைந்து உள்ளதாக ஸ்பெயினின் முன்னணி கால் பந்து வீரரரும் ரியல் மாட்ரிட் அணியின் தலைவருமான செர்ஜியோ ரமோஸ் குறிப்பிட்டுள்ளார்.

லா லிகா கால் பந்து தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ரியல் மாட்ரிட் அணி காணப்பட்டு வருகின்றது. இந்த அணியில் கால் பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகின்றார்.

கடந்த லா லிகா கால் பந்து தொடரினை வென்றெடுக்க முக்கிய காரணமாக இருந்த ரொனால்டோ இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.

நேற்றைய தினம் ரியல் மாட்ரிட் அணி லாஸ் பால்மாஸ் அணியுடன் மோதிய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றியடைந்தது.

எனினும் இந்தப் போட்டியிலும் ரொனால்டோ கோல் எதனையும் அடிக்கவில்லை. இதனுடன் சேர்த்து அவர் மூன்று போட்டிகளில் கோல் எதனையும் அடிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ரமோஸ் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரொனால்டோ விரைவில் கோல்களை அடிப்பார் என்றாலும் அவர் கோல்களை அடிக்க முடியாத நிலை ஏற்படும் போது மனமுடைந்து விடுவார். எனிலும் அவர் கோல் அடிக்காததைப் பற்றி நாம் கவலைக் கொள்ளவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg