Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் தடவையாக வீழ்ந்தார் சானியா! – முதலிடத்தில் ஹலெப்

In டெனிஸ்
Updated: 08:06 GMT, Nov 7, 2017 | Published: 08:05 GMT, Nov 7, 2017 |
0 Comments
1186
This post was written by : Puvanes
saniya001

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹலெப் 6175 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டு சர்வதேச டென்னிஸ் தரவரிசைப்பட்டியிலில் முதலிடத்தினைப் பிடித்துள்ளார்.

நேற்றைய தினம் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலிலேயே அவருக்கு முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அவரைத் தொடர்ந்து ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா 6135 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு முறையே 3, 4, 5 ஆகிய இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்திய நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா 3 இடங்கள் பின்தள்ளப்பட்டு 12 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளார். மேலும் டொப் 10 வரிசையில் இருந்து அவர் வெளியேற்றப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg