Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காபூல் தொலைக்காட்சித் தாக்குதல் முடிவிற்கு வந்தது (மூன்றாம் இணைப்பு)

In உலகம்
Published: 08:38 GMT, Nov 7, 2017 |
0 Comments
1506
icon_com
This post was written by : Suganthini


ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள  Shamshad  தொலைக்காட்சி நிலையத்தின் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ஆப்கானிஸ்தானின் விஷேட படைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு மணி நேர சமருக்குப் பின்னர் தொலைக் காட்சி நிலையம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்த  ஐ.எஸ் அமைப்பினர், இத்தாக்குதல் மூலம்  20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தமையானது, அவர்களின் பிரச்சாரச் செய்தியே தவிர அதில் உண்மை இல்லை எனத் தெரிகிறது.

தாக்குதலுக்கு இலக்கான Shamshad  தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தியில், இத்தாக்குதலில் சக ஊழியர்கள் காயங்களுக்கு மட்டுமே இலக்காகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்திருப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன,

காபூல் தொலைக்காட்சி நிலைய தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு (2ஆம் இணைப்பு)

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி நிலையத்தின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

மேற்படி தொலைக்காட்சி நிலையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. பிரதான தொலைக்காட்சி நிலையத்தை மூவர் கொண்ட பயங்கரவாதக் குழுவினர் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து தாக்குதலில் உயிரிழந்வர்கள் பற்றிய தகவல் இதுவரையில் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

3 பேர் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது, தாக்குதல்தாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சின் பேச்சாளர் நஜீப் டனிஸ் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில் இத்தாக்குலில் உயிரிழந்த ஏனையோர் பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.

காபூலில் தொலைக்காட்சி நிலையத்தின் மீது தாக்குதல்: பலர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி சேவை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட குறித்த தாக்குதல்தாரி, கிரனைட் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டதாக அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த தொலைக்காட்சி சேவை நிலையத்திற்குள் நூற்றிற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)