Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச தரவரிசைப் பட்டியல்! – முதலிடத்தில் ரபெல் நடால்

In டெனிஸ்
Updated: 09:46 GMT, Nov 7, 2017 | Published: 09:38 GMT, Nov 7, 2017 |
0 Comments
1278
This post was written by : Puvanes

உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபெல் நடால் 10645 புள்ளிகளுடன் முதலாவது இடத்தினை பிடித்துள்ளார்.

நேற்றைய தினம் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம், தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாவது இடத்தினை சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு வழக்கப்பட்டுள்ளது.

3, 4, 5 ஆகிய இடங்கள் முறையே ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே, ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய வீரர் திவிஜ் சரண் இரட்டையர் பிரிவில் 50 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும், இந்திய வீரர்களைப் பொறுத்தவரையிலும், ரோகன் போபண்ணா 15ஆவது இடத்தினையும், புராவ் ராஜா 62ஆவது இடத்தினையும், லியாண்டர் பெயஸ் 70ஆவது இடத்தினையும், ஜூவன் நெடுஞ்செழியன் 97ஆவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg