Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கு ஆட்டம் காண்பித்த வீரருக்கு தேடி வரும் அதிஸ்டம்?!

In கிாிக்கட்
Updated: 12:01 GMT, Nov 7, 2017 | Published: 11:04 GMT, Nov 7, 2017 |
0 Comments
3509
icon_com
This post was written by : Puvanes
munra001

நியூசிலாந்தின் அதிரடி துடுப்பாட்ட வீரர் முன்ரோ அடுத்த ஐ.பி.எல் தொடரின்போது அதிக ஏலத் தொகைக்கு வாங்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியின் பலம் வாய்ந்த வீரராக முன்ரோ கருதப்படுகின்றார். இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ரி20 போட்டியில் அவர் சதம் அடித்தது அப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு வித்திட்டது.

இந்திய பந்துவீச்சாளர்களை அவர் சிறப்பாக சமாளிப்பதால் ஐ.பி.எல் போட்டித் தொடருக்கு முக்கியமான வீரராக கருதப்படுகின்றார்.

இதன் காரணமாக அடுத்த ஐ.பி.எல் தொடரின் போது முன்ரோ அதிக விலைக்கு வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய முன்ரோ 4 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 30 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

அதன் காரணமாக 2017ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டித் தொடரில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg