Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்: கமல் திட்டவட்டம்!

In இந்தியா
Published: 13:22 GMT, Nov 7, 2017 |
0 Comments
1314
icon_com
This post was written by : srikkanth

அரசியல் பயணத்தில் ஊழல் குற்றவாளிகளுக்கும் பழைய மூட்டைகளுடன் வருபவர்களுக்கும் இடமில்லை என நடிகர் கமல்ஹாசன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்கு பின்னால் வரும் அரசியல்வாதிகள் நேர்மை தவறினால் அவர்களை கடுமையாக தண்டிக்க தான் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என்றும் கூறினார்.

இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு, நற்பணிமன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்த கமல்ஹாசன், அதன்பின்னர் தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து கருத்துதெரிவிக்கும் போதே, இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவா் தொடா்ந்தும் கருத்து தெரிவிக்கையில், சினிமாவும் அரசியலை போன்றதுதான், கடைநிலை ஊழியா் ஒருவா் தவறுவிடுவாராயின் முழுச் சினிமாவையும் நாமாக்கி விடும்.  அவ்வாறான சூழலில் வெற்றிகரமாக பல சினிமாக்களை தயாரித்துள்ளதாக நம்புகின்றேன்.

அதேபோன்று, அரசியலிலும் சாதாரண தொண்டா் தவறு விடுவாராயினும் நான் உட்பட அனைவரையும் பாதித்துவிடும். எனவே, என்னுடைய அரசியலில் இணைந்திருப்பவா்கள் யாராவது தவறு விடுவாா்களாயின் கடுமையான தண்டனையை எதிா்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ளாா்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg