Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யேமன் அதியுச்ச பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம்: ஐ.நா அதிகாரி எச்சரிக்கை

In உலகம்
Updated: 06:16 GMT, Nov 9, 2017 | Published: 06:15 GMT, Nov 9, 2017 |
0 Comments
1250
This post was written by : Elakkiya

யேமனில் உதவி வழங்கல்கள் மறுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானோருடன் உலகின் அதி உச்ச பஞ்சத்தை பல தசாப்தங்களுக்கு யேமன் எதிர்கொள்ளும் என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் செயலாளர் நாயகம் மார்க் லோகொக் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மார்க் லோகொக் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் மோதல்போக்கை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய மோதல்போக்குளினால் யேமனில் அதிகரித்த பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மில்லியன் கணக்கான பாதிக்கப்பட்டவர்களுடன் பல தசாப்தங்களாக உலகம் கண்டிருக்கும் மிகப்பெரிய பஞ்சம் இதுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யேமனின் பேரழிவு நிலை பல மில்லியன் கணக்கான யேமனியர்கள் தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவி வழங்கல்களை நம்பியிருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக இவ்வார ஆரம்பத்தில் ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் எச்சரிக்கப்பட்டது.

9 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள கொலரா தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு மாத்திரைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மிகவும் அவசியமானது என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை யேமனில் ஏழு மில்லியன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.எரிபொருள், மருந்துகள் உணவுகள் எதுவுமே கிடைக்காத நிலையில், நாட்டின் அனைத்து குடிமக்களும் உயிர்வாழ வேண்டுமாயின் இறக்குமதிகள் மீதே யேமன் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஐ.நா தகவல்களின் பிரகாரம், யேமனின் உள்நாட்டு போரில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சவுதி கூட்டணி தலையிட்டதில் இருந்து 8670 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 ஆயிரத்து 960 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg