Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுக்குடியிருப்பில் பேருந்து விபத்து!

In இலங்கை
Updated: 08:22 GMT, Nov 9, 2017 | Published: 08:22 GMT, Nov 9, 2017 |
0 Comments
1581
This post was written by : Puvanes

புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு நோக்கிச் செல்லும் வீதியின், 10 ஆம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்றைய தினம் குறித்த பகுதியில், ஆடை தொழிற்சாலை ஒன்றின் பெண் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாதையை விட்டு விலகிச் சென்று மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது பேருந்தில் பயணம் செய்ய 20 இற்கும் அதிகமான பெண்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றிக்கு வழிவிட முயற்சி செய்த போதே இந்த விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படும் நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

bus002

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg