Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரழிவை எதிர்நோக்கும் அபாயத்தில் யேமன்: வைத்தியர்கள் எச்சரிக்கை

In உலகம்
Updated: 08:07 GMT, Nov 10, 2017 | Published: 08:07 GMT, Nov 10, 2017 |
0 Comments
1667
icon_com
This post was written by : Risha
yemen

யேமன் நாடானது, அடுத்த வாரமளவில் பாரிய உயிரிழப்பை எதிர்நோக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையினால், யேமன் தலைநகர் ஏற்கனவே போராடி வருகின்றது. இந்நிலையில், யேமனுக்கான அவசர மருந்துப் பொருட்களின் விநியோகத்தை சவுதி அரேபியா அனுமதிக்காத பட்சத்தில் நிலைமை தீவிரமடையும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

மருந்து பற்றாக்குறையினால், புற்றுநோய், நீரிழிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. அந்தவகையில், மருந்து விநியோகத்தில் அபாயகரமான நிலையை நாடு எதிர்நோக்கி வருவதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சவுதியானது, யேமன் மீதான தடைகளை நீக்கி, யேமன் நாட்டிற்கான அவசர மருந்துப் பொருட்களின் விநியோகத்தை துரிதப்படுத்தாவிடின், சிகிச்சை மூலம் குணமடையக் கூடிய நோயாளர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டனர்.

ரியாத் நோக்கி ஹெளதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சவுதியானது யேமனுக்கான வான், கடல் மற்றும் நில மார்க்கமான அனைத்து பாதைகளையும் மூடியமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg